கட்டுநாயக்கா, வல்பொல வீதிக்கு அருகில் சிசு ஒன்றை கட்டுநாயக்கா பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிறிய காட்போட் பெட்டி ஒன்றில் போடப்பட்ட நிலையில் சிசு மீட்கப்பட்டுள்ளது.
ஒன்றரை மாத சிசு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சிசு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை சிசு சிறந்த சுகாதார நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசுவை வீதியில் விட்டுச் சென்றவர்கள் மற்றும் சிசுவின் பெற்றோர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
கட்டுநாயக்கா பொலிஸார் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
0 Comments