Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

295 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானம் விழுந்து நொறுங்கியது


மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூருக்கு 295 பேருடன் இந்த எம்எச்-17 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள உக்ரைன் பகுதியில் சென்றபோது விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

உக்ரைன் ராணுவம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வரும் பகுதியில் விமானம் விழுந்ததாக கூறப்படுகிறது. எனவே, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments