Home » » ஆசிரியர்களுக்கான புதிய சம்பளத்திட்டம் 1.7.2008 முதல் அமுலுக்கு வரஉள்ளது!

ஆசிரியர்களுக்கான புதிய சம்பளத்திட்டம் 1.7.2008 முதல் அமுலுக்கு வரஉள்ளது!


ஆனால் அதற்கான நிலுவை 1.11.2011முதல் அமுலாகுமாம்இதனைஏற்றுக்கொள்ளமுடியாது!போராட்டத்திற்கு தயாராகுவோம் வாரீர்!அறைகூவல் விடுக்கிறார் ...சங்கஆலோசகர் மகாசிவம்!

ஆசிரியர் பிரமாணக்குறிப்பு புதிய பல திருத்தங்களுடன் வெளிவரவுள்ளது. அதற்கான புதிய சம்பளத்திட்டம் 1.7.2008 முதல் அமுலுக்குவரவுள்ளது.ஆனால் இப்புதிய சம்பளத்திட்டத்திற்கான சம்பள நிலுவைகள் 1.11.2011 முதல்தான் அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.
1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திஸ்ஸ தேவேந்திர சம்பள ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் அன்றிலிருந்து இது அமுலுக்குவரவேண்டும். இன்றேல் ஆசிரிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து பாரிய தொழிற்சங்கப்போராட்டத்தை நாடளாவியரீதியில் நடாத்த தயாராகவேண்டும்.
இவ்வாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் த.மகாசிவம் சங்கத்தின் இருநாள் கருத்தரங்கை நிறைவுசெய்துவைத்துப் பேசுகையில் சூளுரைத்தார்.
இச்செயலமர்வு திருகோணமலை ஸ்ரீ கோணலிங்க மகா வித்தியாலயத்தில் சங்கத் தலைவர்; வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் அனைத்து தாய்ச்சங்க உறுப்பினர்களும் ஆட்சிமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
திருத்தியமைக்கப்பட்ட புதிய ஆசிரியர் பிரமாணக்குறிப்பில் சுப்பறா வகுப்பு எனும் அதிசிறப்பு வகுப்பு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.ஏனைய அகில இலங்கை சேவைகள் போல் உத்தேச திருத்தியமைக்கப்பட்டஆசிரியர் சேவையிலும்  சுப்பறா வகுப்பொன்று உருவாக்கப்பட்;டுள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் அதற்கும் தற்போது வேட்டு வைக்கப்பட்டுள்ளது.
மாறாக கீழ்நிலையில் மேலும் இரு வகுப்புகள் கூட்டப்பட்டுள்ளன.  குறைந்த சம்பளத்திற்குரிய வகுப்புகள் அவை. அதாவது ஆசிரியர் சேவையில் இதுவரை 05வகுப்புகள் இருந்தன. ஆனால் இனி 07 வகுப்புகள் இருக்கும்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சம்பள மீளாய்வுக்குழுக் கூட்டத்தில் இதனை எதிர்த்து ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படவேண்டும். திஸ்ஸ தேவேந்திர அறிக்கைக்காலத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவேண்டும்.என்று குரல் கொடுத்தோம். எடுபட்டமாதிரி தெரியவில்லை.
அதிபர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
பாலூட்டுவதற்காக் தாய்மார்களுக்கு 1மணி நேர லீவு!
பிள்ளை பிறந்த நாளிலிருந்து தொடர்ந்து 06 மாத காலம் தாய்ப்பாலூட்டுவதற்காக பாலூட்டும் தாய்மார்களுக்காக தினமும்  1 மணி நேர லீவு பெறும் உரிமை உண்டு. அது பொது நிருவாக சேவைச் சுற்றுநிருபப்படி இன்றுமுள்ளது. அதனை கல்வியமைச்சின் செயலாளரோ அல்லது யாரோ மீறமுடியாது. 8மணிநேரம் அல்லது 6மணி நேரம் வேலைசெய்யும் தாய்மார்களுக்கு இச்சலுகை வழங்கப்பட்டுவருகிறது.
கர்ப்பம் தரித்து 05 மாத காலத்திலிருந்து மகப்பேற்றுக்காலம்வரை காலையில் அரை மணிநேரம் தாமதித்து பாடசாலைக்குச் செல்லவும் பாடசாலை முடிவடைதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னர் வீடு திரும்பவும் உரிமையுண்டு.
அதனை மறுக்க யாருக்கும் உரிமை கிடையாது.
பெண்ஆசிரியைகளுக்கு மகப்பேற்றிற்காக 84நாட்கள் லீவு வழங்கப்படும். இது சலுகையல்ல உரிமை. விரும்பினால் மேலும் 84 நாட்கள் அரைச்சம்பளத்துடனான லீவு பெறப்படும். அதற்குமப்பால் மருத்துவநிபுணரின் அறிக்கையின்பிரகாரம் மேலும் 84 நாட்கள் சம்பளமற்ற லீவு பெறுவதற்கும் உரிமையுண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. என்று தெரிவித்தார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |