Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 1008சங்குகளால் ஆன சங்காபிசேகமும் பாற்குடபவனியும்


மட்டக்களப்பு முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாவிசேகம் இடம்பெற்று 05வருடங்கள் நிறைவுபெற்று இன்று(14) திங்கட்கிழமை திருவோண நட்சத்திரத்தில் மூலமூர்த்தியான நாகலிங்கேஸ்வர பெருமானுக்கும் பரிவார தெய்வங்களுக்கும்  நூற்;றுக்கணக்கான அடியார்களின் பாற்குடபவனி முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்டு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தை தரிசித்து பக்தர்களின் அரோகரா கோசத்துடன் பாலபிசேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து 1008 சங்குகளால் ஆன சங்காபிசேகம் இடம்பெற்றது.


இதன் போது அடியார்களுக்கான சங்குத்தீர்த்தம் வழங்கப்பட்டதுடன் அன்னதான நிகழ்வும் சிறப்புற நடைபெற்றது. இக்கிரியைகள் அனைத்தையும் சிவஸ்ரீ கார்மேகன் குருக்கள்(மன்னம்பிட்டி ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு) ஆலயக்குரு சிவஸ்ரீ வ.ஹரிகரசர்மா, சாதகாசிரியர் சிவஸ்ரீ. பரமானந்தம் குருக்கள் ஆகியோர் நிகழ்த்தினர்.



Post a Comment

0 Comments