Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் பெருமளவு போலிக் கடன் அட்டைகளுடன் நான்கு பேர் கைது! - லண்டனில் பிடிபட்டவர்களுக்கு சிறைத்தண்டனை

பெருமளவு போலிக் கடன் அட்டைகளுடன் நான்கு பேர் கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 437 போலி கடன் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் நெல்லியடி, திருகோணமலை, வெள்ளவத்தை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்படும் கருவிக்ள மற்றும் 40 ஆயரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்ளோஸ்டஷெயார் பிரதேசத்தின் வங்கி தன்னியக்க நிலையங்களில் மோசடிகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 13 ஏ.ரீ.எம். நிலையங்களின் வாடிக்கையாளர் தகவல்களை திரட்டி அவற்றின் ஊடாக மோசடியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பசீர் எப்ராஹிம், அசோக் பாலசுப்பரமணியம் மற்றும் தங்கவேல் வில்வானந்தம் ஆகியோர் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
2013ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. எப்ராஹிம் என்பவருக்கு 16 மாத கால சிறைத்தண்டனையும், ஏனைய இருவருக்கும் ஒரு ஆண்டு கால சிறைத்தண்டயையும் நீதிமன்றம் விதித்துள்ளது.


       

       

Post a Comment

0 Comments