Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பரந்தனில் கோர விபத்து! யாழ் இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி! (Photos)

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் இருவர் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அடுத்தடுத்துச் சென்ற டிப்பர் வாகனங்கள் இரண்டை முந்திச்செல்ல முற்பட்டவேளை முன்னால் சென்ற டிப்பருடன் இவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், ராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த உதயராசா விதுசன் (வயது 21), சிவானந்தராசா ஜேமஸ் நெல்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கிளிநொச்சிச் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments