இந்தோனேசியாவில் இளம்பெண் ஒருவர் பிரசவத்தில் குழந்தைக்கு பதிலாக பல்லியை பெற்றெடுத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா ஒயினுண்டோ கிராமத்தைச் சேர்ந்தவர் டெபி நுபாடோனிஸ் (31) என்ற பெண். எட்டு மாத கர்ப்பமாக இருந்த டெபிக்கு கடந்த மே மாதம் பிரசவ வலி உண்டானது. சுத்தமாக மருத்துவ வசதிகளே இல்லாத அக்கிராமத்தில் டெபிக்கு உள்ளூர் மருத்துவச்சி ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார்.
முடிவில் டெபிக்கு பல்லி ஒன்று பிறந்ததாக மருத்துவச்சி தெரிவித்துள்ளார். இதனால் ஊரில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மாந்திரீகம் செய்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் பெண் ஒருவருக்கு பல்லி குழந்தையாக பிறந்த விசயம் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்தது.
இணையத்தில் வெளியான இத்தகவலால் பரபரப்பு உண்டானது. இது குறித்து அக்கிராம மக்களிடம் விசாரித்த போது டெபிக்கு கர்ப்பிணிக்கான அனைத்து அறிகுறிகளும் இருந்ததாகவும், பிரசவ வலி ஏற்பட்டதும் உண்மை எனவும் தெரிவித்துள்ளனர்....!
0 Comments