சர்வதேச புகைத்தல் - மது எதிர்ப்பு தினம் கடந்த 31ஆம் திகதி அனுஷ்ட்டிக்கப்பட்டது. அதனையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை (03) மட். கல்லடி சக்தி வித்தியாலயத்தினால் புகைத்தல் - மது எதிர்ப்புப் பேரணியொன்று நடத்தப்பட்டது.
சக்தி வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியாக நாவற்குடா சமூரத்;தி வங்கி வரைச்சென்று பின்னர் பாடசாலையினை வந்தடைந்தது.
சக்தி வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியாக நாவற்குடா சமூரத்;தி வங்கி வரைச்சென்று பின்னர் பாடசாலையினை வந்தடைந்தது.
இதன்போது, புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும், இளைஞனே மதுபோதைக்கு அடிமையாகாதே, குடி குடியைக் கெடுக்கும், ஆண்மகனே ஆயுளைக் குறைக்காதே, புகைத்தலை இல்லாது ஒழிப்போம், மரணம் எனும் தூது வந்தது அது மது எனும் வடிவில் வந்தது, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச்சென்றனர்.
இப்பேரணியில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

0 Comments