Home » » பட்டிப்பளை பிரதேச பாடசாலைகளில் புதிய செயற்றிட்டம்

பட்டிப்பளை பிரதேச பாடசாலைகளில் புதிய செயற்றிட்டம்

வேள்ட்விஸன் அரச சார்பற்ற அமைப்பின் பட்டிப்பளைப் பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,  பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மட்.நாற்பதுவட்டை விபுலாநந்தா வித்தியாலயம், முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளைத் தெரிவு செய்து மல்ரி மைஸ் மிச்சிவ் (multi mice mischief ) செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இப்பாடசாலையைச் சேர்ந்த 10 ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகள் நேற்று வெள்ளிக்கிழமை (06) வழங்கப்பட்டன.

 கிழக்கு மாகாண கல்வி கணித தகவல் தொழிநுட்பப் பாட உதவிப் பணிப்பாளர் திருமதி.ஏ.ஜோன்சன்இதன்போது மேற்படி பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தினை பார்வையிட்டதோடு இந்நிகழ்ச்சித்திட்டத்தினை முன்னெடுத்து செல்வதற்கான ஆலோசனைகளையும் பாடத்திட்டம் தொடர்பான ஆசிரியர்களை இத்திட்டத்திற்குள் உள்வாங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் வேள்ட்விஸன் நிறுவன கல்வித்திட்ட இணைப்பாளர் சு.அமுதராஜ்; கலந்து கொண்டார். இத் திட்டத்தின் மூலம் பயிற்றப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் கணனியில் தயாரிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் இக்கற்கை செயற்பாடுகளில் மவூஸ் மூலமாக நேரடியாக ஈடுபடக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளது. குறிப்பாக இச் செயல்பாடுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களும் தனித்தனியாக விடையளிக்ககூடிய வாய்ப்புக்கள் இந்நிகழ்ச்சி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் திட்டத்தின் ஊடாக கற்பதற்கு மாணவர்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கின்ற அதேவேளை ஆசிரியர்களும் அதிபர்களும்  இச்செயற்றிட்டத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
                   
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |