யாழ்ப்பாணம் மூளாய் முன்கோடை என்ற இடத்தில் இன்று காலை ஆண் ஒருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்திருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கீரிமலை வீதி சித்தங்கேணியைச் சேர்ந்த கந்தசாமி வவிகரன் (வயது-37) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் தனது வீட்டிலிருந்து இன்று காலை 7 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் புறப்பட்டு மூளாய்க்கு வந்துள்ளார்.
திருவெண்காடு இணையத்தை லைக் பண்ணிட்டுப் போங்கள்
இந்த நிலையில் காலை 7.30 மணியளவில் மூளாய் - முன்கோடை என்ற இடத்தில் ஒழுங்கையில் இருந்து தனது கழுத்தை பிளேற்றால் அறுத்துகொண்டிருந்ததை அயலவர்கள் கண்டுள்ளனர்.
அவரைத் தடுப்பதற்கு முயன்றபோதும் அது முடியாமல் போகவே அவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது. சடலத்தில் வலது கையில் பிளேற் ஒன்றும் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்று காலை மூளாய் - மாவடி வீதியிலுள்ள கடையொன்றில் பிளேற் வாங்கியதாக கடை உரிமையாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளர்.
0 Comments