Advertisement

Responsive Advertisement

ஹசலக்க பிரதேசத்தில் காலையில் பாடசாலை சென்ற மாணவி மாலையில் குழந்தை பிரசவித்தார்

காலையில் பாடசாலைக்குச் சென்ற 16 வயதுடையமாணவியொருவர் மாலையில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் ஒன்று ஹசலக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 
 
வழமை போன்று பாடசாலைக்குச்சென்று விட்டு மாலை வீடு திரும்பிய மாணவி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 
 
பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள கிராமிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்தியர்கள் மாணவியை  பரிசோதித்து விட்டு உடனடியாக மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி  வைத்துள்ளனர். 
 
அங்கு இரவு 7 மணியளவில் மாணவி குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார். அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் மகளிடம் விசாரித்த போது தனது சிறிய தந்தையே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments