Advertisement

Responsive Advertisement

வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான விமானம் - அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பிய விமானி

அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் சிறிய ரக விமானமொன்று வீடொன்றில் மோதி திங்கட்கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் அந்த விமானமும் வீடும் தீக்கிரையாகி முழுமையாக சேதமடைந்துள்ளன. 
இந்தச் சம்பவத்தில் விமானி சிறிய காயங்களுடன் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். 
 
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் அந்த விமானத்தில் பயணித்த விமானி உயிர் தப்பியது மட்டுமல்லாமல் தீயை அணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதைக் கண்டு திகைப்படைந்துள்ளார்.
அந்த விமானி தென் மெட்றோ தீயணைப்புப் பிரிவில் பொறியியலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இயந்திரக் கோளாறு இந்த விமான விபத்துக்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments