Home » » தமிழர்களை அந்தமான் தீவில் குடியேற்றி னால் நிம்மதியாக வாழ்வார்கள்

தமிழர்களை அந்தமான் தீவில் குடியேற்றி னால் நிம்மதியாக வாழ்வார்கள்

இலங்­கையில் புரை­யோடிப்போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு முறை­யாக தீர்வு அளி க்­கப்­ப­டாமல் உள்­ளது. இதனால் தமிழ் பேசும் மக்கள் நிம்­ம­தி­யாக வாழமுடி­யாத சூழல் காணப்­ப­டு­கின்­றது. எனவே, இவர்­களை அந்­தமான் தீவி­லா­வது குடி­யேற்­றி னால் நிம்­ம­தி­யாக வாழ்­வார்கள் என அகில இலங்கை அர­சாங்க பொது ஊழியர் சங்­கத் தின் தலைவர் எஸ்.லோக­நாதன் தெரி­வித் தார்.
இச்­சங்­கத்தின் 20 ஆவது வரு­டாந்த பொது க்­கூட்டம் கல்­முனை வை.எம்.சீ.ஏ. மண் ­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் பேசு­கையில்:-
வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் தமது ஜன­நா­யக உரி­மையை பெற்று வாழ மாகாண சபை தேர்­தலில் வாக்­க­ளித்து மக்கள் பிர தி­நி­தி­களை தெரிவு செய்­தார்கள். இந்த மக் கள் பிர­தி­நி­திகள் தமது அர­சியல் செயற்­பா­டு ­களை முன்­னெ­டுக்க முடி­யாத அள­ வுக்கு அடக்கு முறைகள் உள்­ள­தையும் மாகாண நிர்­வாக செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடியாத அள­வுக்கு ஆளு­நர்­களின் கைகள் ஓங்­கி­யுள்­ள­தையும் காணலாம்.
வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி னேஸ்­வ­ர­னிடம் சிறந்த நிர்­வா­கத்­திறன் இருந்தும் வட மாகாண ஆளு­நரின் கட்­டுப்பாட்டால் அவரால் சுய­மாக இயங்க முடி­யா­துள்­ளது.
கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரோ தூங்கும் முத­ல­மைச்­ச­ராக உள்ளார். இம்­மா­காண அபி­வி­ருத்­திக்கு வந்த பணத்தில் ஒரு பங்கை மீண்டும் திறை­சே­ரிக்கு அனுப்பி சாதனை படைத்­துள்ளார். கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் சுறு­சு­றுப்­பாக இயங்கி செய்த சேவைகள் இன்று இல்­லாமல் உள்­ளது. இந்­நி­லையில் மாகாண சபை ஒன்று கிழக்­கிற்கு தேவையா என்று கேட்க விரும்­பு­கின்றேன்.
இன்று கிழக்கு மாகாண சபையில் முறை­யான இட­மாற்றத் திட்டம் இல்லை. அரச ஊழி­யர்கள் பந்­தா­டப்­படும் நிலை உள்­ளது. கிழக்கு மாகாண அமைச்­சுக்­க­ளுக்­கான ஆலோ­சனை சபை அமைக்­கப்­ப­ட­வில்லை. இச்­ச­பையை அமைப்­பதில் காலம் கடத்­து­வது ஏன்?
சாதா­ரண சிற்­றூ­ழியர் ஒரு­வ­ரைக்­கூட நிய­மிக்க முடி­யாத அள­வுக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் உள்ளார் என்றால் வெறும் கண்­து­டைப்­புக்­கா­கவே வடக்கு, கிழக்கு அதி­கார பர­வ­லாக்கல் இடம்­பெற்­றுள்­ளது என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது.
யாழ்.மாந­கர சபையில் வெற்­றி­ட­மா­க­வு ள்ள பத­வி­க­ளுக்கு ஆட்­களை நிய­மிக்க ஆளுநர் தடை­யா­க­வுள்ளார் என்றால் அங்கு என்ன ஆட்சி இடம்­பெ­று­கின்­றது.
இவை ஒரு­பு­ற­மி­ருக்க, சிறு­பான்மை இன மக்­களின் வழி­பாட்டுத் தலங்­களை தாக்­கு­வதை கண்­ட­றிந்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்த முடியாதுள்ளதென்றால் இந்நாட்டில் மதச் சுதந்திரம் உள்ளதா? என்று கேட்க வேண்டி யுள்ளது. எது எவ்வாறியிருப்பினும் இறை தீர்ப்பு கிட்டும் நாள் வெகு தொலை வில் இல்லை. அதற்காக நாம் கண்ணீர் மல்கி இறைவனை மன்றாடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |