Home » » ஐபிஎல் போட்டியில் பரபரப்பு சம்பவம் ஆஸ்திரேலிய வீரரை நோக்கி பேட்டை வீசினார் பொல்லார்டு

ஐபிஎல் போட்டியில் பரபரப்பு சம்பவம் ஆஸ்திரேலிய வீரரை நோக்கி பேட்டை வீசினார் பொல்லார்டு

மும்பையில் நேற்று நடந்த போட்டியில் ஐபிஎல் புள்ளிப்பட் டியலில் 4வது இடத்தில் இருந்த பெங்களூரும், கடைசி இட த்தில் இருந்த மும்பையும் மோதின. முதலில் பேட் செய்த  மும்பையின் துவக்க பேட்ஸ்மேன் டங்க் போது மான அளவு ரன்களை சேர்க்கவில்லை. கவுதம் 30 ரன்களை சேர்த்து ஆறுதல்  அளித்தார். இறுதியில் பொல்லார் டும்,கேப்டன் ரோகித் சர்மாவும்  அதிரடியில் இறங்கி அணியின் ஸ்கோரை கவுரவமான இடத்துக்கு  கொண்டு சென்றனர். இறுதியில் 5 விக்கெட்டுக்கு 187 எடுத்தது  மும்பை. அடுத்து விளையாடிய பெங்களூர் அணியில் கிறிஸ்  கெயில் நன்கு பேட் செய்து ரன்களைச் சேர்த்தாலும், அவருக்கு  ஈடு கொடுத்து மற்றவர்கள் விளையாட வில்லை. கேப்டன் விராட்  கோஹ்லி மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகை யில் விளை யாடினார். கெயில் 38 ரன்களும், கோஹ்லி 35 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணியால் 8 விக்கெட்  இழப்புக்கு 168 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால்,  19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியது. 






இந்த போட்டியில் மும்பை அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை பாழடிக்கும் வகையில் அமைந்திருந்தது இரு அணி வீரர்களிடையே எழுந்த மோதல். மும்பை பேட்டிங் செய்த போது 17வது ஓவரை வீச வந்தார் பெங்களூர் அணியின் மிட்செல் ஸ்டார்க். அவர் ஆக்ரோஷ மாக வீசிய பவுன்சரை அடிக்க முடியாமல் குனிந்து தப்பினார் பொல்லார்டு. அப்போது பொல்லார்டுக்கு அருகே வந்த ஸ்டார்க் அவரைப் பார்த்து ஏதோ கூறினார். Ôஇங்க நிற்காத, போயிடுÕ என்பது போல் அவரைப் பார்த்து சைகை செய்தார் பொல்லார்டு. அடுத்த பந்தை வீச ஓடி வந்தார் ஸ்டார்க். அப் போது, சைடு ஸ்கிரீன் பக்கம் ரசிகர்களின் நடமாட்டம் தெரியவே, பேட்டிங் செய்து கொண்டி ருந்த பொல்லார்டு ஸ்டம்பில் இருந்து விலகி அவர்களை நகருமாறு சைகை காட்டினார். ஆனால், பந்து வீச ஓடி வந்து கொண்டிருந்த ஸ்டார்க், இதை சிறிதும் கண்டு கொள்ளாமல் பிட்ச்சில் இருந்து விலகி நின்ற பொல்லார்டை நோக்கி பந்தை வீசினார். பொல்லார்டு விலகியதால் அவர் மீது பந்து படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொல்லார்டு, ஆவேசமாக ஸ்டார்க்கை நோக்கி தனது கையில் இருந்த பேட்டை வீச முயன்றார்.





ஆனால், பேட் அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. ஸ்டார்க் அருகில் நின்றிருந்தால், பொல்லார்டு வீசிய பேட் அவர் மீது பட்டிருக்கும். உடனடியாக அம்பயர்கள் அங்கு ஓடி வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். ஆனால், அதனுடன் மோதல் முடியவில்லை. பொல்லார்டை ரன் அவுட் செய்தார் ஸ்டார்க், அப் போதும், எல்லைக்கோட் டுக்கு வெளியில் நின்ற பொல்லார்டை எல்லைக் கோட்டுக்குள் வருமாறு சைகை செய்த படியே பெயில்சை தட்டி விட்டார். இது குறித்து இடைவேளை யின் போது ஸ்டார்க் கூறுகையில், ÔÔஆஸ்திரேலிய வீரர்களுக்கும், பொல் லார்டுக்கும் இடையே ஏதோ இருப்பது போல் தோன்றுகிறது,ÕÕ என்றார். மிட்செல் ஸ்டார்க், பொல் லார்டை நோக்கி பந்தை வீசியதும், அவர் ஸ்டார்க்கை பேட்டால் தாக்க முயன்றதும் பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |