பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலம்பாவெளியில் பனம்பொருள் கைப்பணி மாதிரிக் கிராம பயிற்சி நிலையம் திங்கட்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி பயிற்சி நிலையத்தில் 172 பெண்கள் கைப்பணி பயிற்சி பெற்றுவருகின்றனர்.
இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, தேசிய இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments