லாட்டரி சீட்டில் பரிசு விழவேண்டும் என்பதற்காக மந்திரவாதியை அணுகிய பிரபல நடிகையை ஏமாற்றி கற்பழித்த மந்திரவாதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு துணையாக இருந்த மற்றொரு மந்திரவாதியை போலீஸார் தேடிவருகின்றனர்.
மும்பையில் டெலிவிஷன் சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளவர். ஆனால் அவருக்கு இதுவரை லாட்டரி சீட்டு விழுந்ததே இல்லை. இந்நிலையில் இஸ்மாயில்கான் என்ற மந்திரவாதியை அணுகி, தனக்கு லாட்டரி சீட்டு விழவைக்கும்படி கூறியுள்ளார். அதற்கு ரூ.25 லட்சம் செலவாகும் என்றும், அவ்வாறு செலவழித்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள லாட்டரி பரிசு கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய நடிகை ரூ.25 லட்சத்தை மந்திரவாதியிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மந்திரவாதி, பகவான் என்ற இன்னொரு மந்திரவாதியுடன் சேர்ந்து நடிகையின் வீட்டில் பூஜை செய்ய வந்துள்ளனர். பூஜைக்கு முன்னர் நடிகை தன்னோடு செக்ஸ் உறவு கொள்ள வேண்டும், அப்போதுதான் பூஜை சக்தியுள்ளதாக இருக்கும் என்றும் மந்திரவாதி இஸ்மாயில்கான் கூறவே அதற்கும் நடிகை சம்மதித்து உள்ளார்.

பின்னர் நடிகையை இருவரும் மாறி மாறி செக்ஸ் உறவு கொண்டவுடன் வீட்டில் இருந்து தப்பித்து சென்றுவிட்டனர். அதன்பின்னர்தான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடிகை, உடனடியாக மும்பையில் உள்ள சார்கப் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸார் இஸ்மாயில்கானை கைது செய்தனர். தப்பியோடிய பகவான் என்ற மந்திரவாதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகை தன்னுடைய பெயர் வெளியே தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க போலீஸார் அவருடைய பெயரை வெளியிடவில்லை. ஆனால் நடிகையின் வயது 27 என்பதை மட்டும் மும்பை பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
0 Comments