Advertisement

Responsive Advertisement

சர்வதேச முருகபக்தி மாநாட்டில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நுண்கலை பீடத்தின் விரிவுரையாளர் கௌரவிப்பு

சுவிஸில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச முருகபக்தி மாநாட்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நுண்கலை பீடத்தின் விரிவுரையாளர் செல்வி துரைசிங்கம் உஷாந்தி முருகன்மீது அமைந்தள்ள பரதநாட்டிய பதம் என்னும் கருப்பொருளில் சிறப்புரையாற்றியுள்ளார்.
இவரின் இந்த உரை விழாவில் கலந்துகொண்ட அனைவரது கவனத்தினையும் வெகுவாக ஈர்த்ததுடன் விழா குழுவினராலும் பாராட்டப்பட்டதுடன் கௌரவிக்கப்பட்டுமுள்ளார்.

மட்டக்களப்பினை சேர்ந்த செல்வி துரைசிங்கம் உஷாந்தி நடனத்துறையில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைமாமனி ஆகியவற்றினை நிறைவுசெய்துள்ளார்.

இவர் பரதநாட்டிய துறையில் கிழக்கு மாகாணத்தில் தனக்கென ஒரு பாதையினை வகுத்து சிறந்த முறையில் தமது செயற்பாடுகளை வெளிப்படுத்திவரும் ஒரு இளம் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments