மின்சாரத் தாக்குதலுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (06) மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸின் ஏற்பாட்டில், விமானப்படையினரின் வானூர்தி மூலம் இவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவர் தனது வீட்டில் திங்கட்கிழமை (05) மின் தாக்குதலுக்கு உள்ளானதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
0 comments: