Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி


மட்டக்களப்பு  அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி அதிபர் திருமதி .பிரதீபா தர்ஷன் தலைமையில்  இரண்டு நாட்களாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
முதல் நாள் விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி  உதவிக் கல்வி பணிப்பாளர்  எம் .புவிராஜா , சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தர் .டி .மேகராஜன் ,ஆசிரியர் ஆலோசகரான திருமதி .சிவஞான ஜோதி குரு  (நடனம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.  

இரண்டாவது நாள் விளையாட்டு நிகழ்வு மாலை 03.00 மணிக்கு ஆரம்பமானது. இரண்டாவது நாள் விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு  கோட்டக் கல்வி அதிகாரி  மண்முனை வடக்கு  எ .சுகுமாரன் , சிறப்பு விருந்தினர்களாக  மட்டக்களப்பு  கரித்தாஸ் எகெட் இயக்குனர் அருட்தந்தை  கிறைட்டன் அவுட்ஸ்கோன், அமிர்தகழி கிராம சேவை உத்தியோகத்தர் என்டன் ஜெபஸ் , மட்டக்களப்பு இலங்கை வங்கி கிளை முகாமையாளர் திருமதி .அபிராமி சிவபிரிந்தன் . பாலமீன்மடு பொலிஸ் பொறுப்பதிகாரி சதுர தர்மசேன ஆகியோருடன் பாடசாலை சிறார்களும் , இவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இவ்விரண்டு நாள் விளையாட்டு  போட்டி            நிகழ்வுகளில் சிறார்களின் வினோத விளையாட்டு நிகழ்சிகளும், பெற்றோர் மற்றும் அதிதிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, இங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் அதிதிகளாக வருகை தந்து விளையாட்டு நிகழ்வை சிறப்பித்து ,போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற அதிதிகளுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது . 

இப் பாலர் பாடசாலை சிறார்களின்  இல்லங்களாக ,பச்சை இல்லம் மற்றும் மஞ்சள் இல்லங்கள் போட்டியிட்டன . இதில்  பச்சை இல்ல முதல் இடத்தை பெற்றுக்கொண்டது .



































Post a Comment

0 Comments