மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த நபர் ஒருவரை வெல்லாவெளி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(18) கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது கையடக்கத்தொலைபேசி மற்றும் பென்ரைவ் என்பவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இவரது கையடக்கத் தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் இருந்ததாகவும் தெரிய வருகின்றது.
கைதுசெய்யப்பட்ட நபர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments