மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனைப்பற்று கோட்ட கல்விப்பணிமனையின் ஆரையம்பதி மகாவித்தியாலய பாடசாலையில் இரவு நேரப்பாடசாலை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி மகாவித்தியாலய அதிபர் தவேந்திரகுமார் தலைமையில் தரம்11, தரம்10 படிக்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் இரவுப்பாடசாலை நாளாந்தம் வேலை நாட்களில் மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடை பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.
க.பொ.த.(சா/த)ப் பரீட்சையில் மாணணவர்களின் சித்தி மட்டத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும், வெளி சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் இங்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மகிந்த சிந்தனையின் கீழ் ஆயிரம் பாடசாலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள இப்பாடசாலை 1AB தரத்தில் இயங்கும் பாடசாலை ஆகும். கலவன் பாடசாலையாக இருந்;த இப்பாடசாலை அண்மையில் தரம் 9 வரை ஆண்கள் பாடசாலையாக பிரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இரவு நேரப்பாடசாலை ஆரம்பிக்கும் நிகழ்வில் முன்னால் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்
0 Comments