Home » » பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூட்டம்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூட்டம்

மட்டக்களப்பு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய சந்திப்பு என்று நேற்று புதன்கிழமை (14) மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் அமைந்துள்ள கைட் நோசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

இவ் ஒன்று கூடலுக்கு இக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழக பட்டம் பெற்று தற்போது ஆசிரியர்களாக கடமை புரியும் ஆசிரியர்கள், விரிவுரையாளார்கள், மற்றும் பல்வேறு துறைசார் பதவி வகிப்பவர்கள்,  என பலர் கலந்து கொண்டதுடன், பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களும், தற்போது இலங்கையிலுள்ள பல்வேறு பல்கைலக் பல்கலைக் கழகங்களிலும் கல்வி கற்றுக் கொண்டிருக்கம் உள்வாரி, வெளிவாரி மாணவர்களென பலர் கலந்து கொண்டனர்.

இதன்பொத மட்டக்களப்பு மாவடத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒனறியம் அமைப்பது பற்றி கலந்துரையாடப்பட்டன.

இவ்வொன்றியம் அமைப்பதற்கான நோக்கம் உள்வாரி மற்றும் வெளிவாரி ரீதியாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அதில் பல்கலைக்கழகத்தின் நுழைவுப் பரீட்சையில் பெரும்பாலானோர் சித்திபெறாமல் உள்ளதாகவும், அந்த வகையில் அவற்றுக்குரிய நுண்ணறிவு உளசார்பு பரீட்சைகள் ஆசிரியர்களினால் நடாத்தப்படுவதில்லை  எனவும், அவற்றை பூர்த்தி செய்யவதற்காகவே இவ்வாறான செயற்பாட்டுக்குழுவை ஆரம்பிப்பது எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்விநிலையில் அடிமட்டத்தில் தள்ளப்பட்டுக் கொண்டு போகின்றன அதில் உயர் மட்டத்திற்கு கட்டியெழுப்பும் நோக்குடனே மட்டக்களப்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டு செயற்படவள்ளதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள்  இதன்போது தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |