Advertisement

Responsive Advertisement

மர்மமான முறையில் மட்டக்களப்பு கல்லடியில் கரை ஒதுங்கிய வங்கி ஊழியர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி கடற்கரையில் இன்று புதன்கிழமை மாலை தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பில் இயங்கும் தனியார் வங்கியொன்றில் காசாளராக கடமை புரியும் வவுனியாவைச் சேர்ந்த எம்.லதீஸன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார் எனக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞரின் சடலம் மரண விசாரணைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 




Post a Comment

0 Comments