இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரெரேசா டேல்லாச்சி (Teresa Tellechea) அரசியல் நிபுணர் ஆர்.ஈ.சந்தீப் குரூஸ் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைப் பிரதிதிநிதிகளை நேற்றுக் காலை ஓட்டமாவடி அமெரிக்கன் கல்லூரி கேட்போர் கூடத்தில் சந்தித்தனர். இச் சந்திப்பில் மாவட்டத்திலுள்ள மக்களது பிரச்சினைகள், அவர்களது தேவைகள், சமூக மட்ட அமைப்புகளின் செயற்பாடுகள், மத நிறுவனங்கள் மதம் சார்ந்த பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் வீ.கமலதாஸ், உப தலைவர் ஏ.எல்.ஜுனைட் நளீமி, பொதுச் செயலாளர் எஸ்.எம்.இஸ்ஸதீன் உட்பட அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது, சமகாலப் பிரச்சினைகள், கடந்தகால முரண்பாட்டு விடயங்களுக்கான தோற்றுவாய்கள், எதிர்காலத்தில் அவ்விடயங்கள்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபை முன்னெடுக்கவுள்ள விடயங்கள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், சமூகத்தில் தேவையாக உள்ள ஊடக இடைவெளி குறித்தும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் குறித்தும் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.
0 Comments