Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்ட முழு நேர ஊடகவியலாளர்களின் ஒன்றியம் தலைவராக வரதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு நேர செய்தியாளர்களாக  பணியாற்றி வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பிராந்திய செய்தியாளர்களை கொண்டு மட்டக்களப்பு மாவட்ட முழு நேர ஊடகவியலாளர்களின் ஒன்றியம் என்ற அமைப்பு இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் அங்குரார்ப்பணம் இன்று மட்டக்களப்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு நேர ஊடகவியலாளர்களாக பல்வேறு செய்தி ஸ்தாபனங்களுக்கும் செய்திகளை வழங்கும் ஊடகவியலாளர்கள் இணைந்து இன்று இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இன்றைய நீண்ட நேர கலந்துரையாடலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு நேர ஊடகவியலாளர்களாக பணியாற்றுவோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளும் இதன்போது கலநதுரையாடப்பட்டன. இதன் பின்னர் முழு நேர ஊடகவியலாளர்கள் அமைப்பாகச் செயற்பட்டு இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது. இதன் தலைவராக சிரேஷ்ட செய்தியாளர் எஸ்.வரதராஜன் ஏகமனதாக தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். இன்ரநியூஸ் நிறுவன மட்டக்களப்பு ஊடக இல்ல முன்னாள் பணிப்பாளரும் சுதந்திர ஊடகவியலாளருமான ஏ.எச்.ஏ. ஹுஸைன் பொதுச் செயலாளராகவும் உப தலைவர்களாக சிவம் பாக்கியநாதன் (ஆங்கில மற்றும் தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்)இ மற்றும் பழுலுல்லாஹ் பர்ஹான் (சுதந்திர ஊடகவியலாளர்) ஆகியோரும் உப செயலாளராக ஏ. கங்காதரன் (சுடரொளி செய்தியாளர்)இ பொருளாளராக கே.காந்தராஜா (தினசரி செய்தி ஆசிரியர்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதற்கு மேலதிகமாக ஏழு பேர் கொண்ட நிருவாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது. இந்த குழுவில் பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி சிரேஷ்ட செய்தியாளர்களான சி.பி.ஹரிச்சந்திரன், ரீ.எல். ஜவ்பர் கான், வி.கிருஷ்ணகுமார், சுதந்திர ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல், வீரகேசரி செய்தியாளர் எஸ்.பி.சபேஷ், கனிஷ்ட ஊடகவியலாளர்களான எம்.ரீ.எம். பாரிஸ், பதுர்தீன் சல்மா ஜெஸ்மிலா பானு ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments