பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் கரையோரம் பேணல் திணைக்களத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் தொடர்ந்து பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர், பொலிஸ்அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளுராட்சி சபைகளின் செயலாளர்கள் உட்பட அரச உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமூட்டும் ஒருநாள் செயலமர்வு மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நேற்று ஆரம்பமானது.
கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.கோகுலதீபன் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒந்தாச்சிமடம் முதல் வாகரை வரையான 120 கிலோமீற்றர் கரையோர பிரதேசங்கள் உள்ளன. இவைகள் 8 பிரதேச செயலகப்பிரிவுகளில் அடங்குகின்றன.
இக்கரையோர பிரதேசசங்களில் சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணித்தல் மண்அகழ்வு மரங்களை வெட்டுதல்போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.இவற்றிற்கெதிராக எவ்வாறு சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடப்பான சட்ட ஆலோசனைகளும் இங்கு வழங்கப்பட்டன.
கரையோரம் பேணல் திணைளத்தின் சட்ட ஆலோசகர் பாஞ்சாலி பெர்னாண்டோ சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.



0 Comments