Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கேக் நிறுவனத்தின் உரிமையாளரை ஆஜராகுமாறு நீதவான் உத்தரவு

கம்பஹா மாவட்டத்தின் வியாங்கொடை பிரதேசத்திலுள்ள கேக் நிறுவனத்தின் உரிமையாளரை எதிர்வரும்  27-05-2014 திகதி மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.எம்.அப்துல்லாஹ் புதன்கிழமை (07)  உத்தரவிட்டதாக காத்தான்குடி பிரதேச மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.றபீக் தெரிவித்தார்.
மேற்படி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக காத்தான்குடிக்கு கொண்டுவரபட்ட மனித பாவனைக்குதவாத 175 கிலோ கேக் வகைகளை கைப்பற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கேக் பொதிகளையும் அதனை விற்பனை செய்யவந்த விற்பனைப் பிரதிநிதியையும் புதன்கிழமை (07)  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரனை செய்த நீதவான குறித்த விற்பனை பிரதிநிதியை பிணையில் விடுதலை செய்ததோடு மேற்படி உத்தரவைப்பிறப்பித்தார்.
காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீனின் வழிகாட்டலில் இக் கேக் வகைகள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments