மட்டக்களப்பு மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை அமைப்பதற்கான மாபெரும் கூட்டம் எதிர்வரும் மே 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும் மே 14 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா கோவில் முன்றலில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகசார் மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2012/13 இல் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 0766651616, 0755237942 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினையினை அடுத்தே இவ் ஏற்பாடு இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments