யாழ்ப்பாணம் நீர்வேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினம் நிரூபன் என்கின்ற இளைஞன் காதல் தோல்வியால் எடுத்த முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காதலித்து ஏமாற்றிய கிருத்திகாவின் 188 படங்களை பேஸ்புக் இல் அல்பமாக ஏற்றி விட்டு, தற்கொலைக் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார் நிரூபன்.
யாழின் பிரபல பாடசாலையொன்றின் அதிபரின் மகளான கிருத்திகா ராஜசேகரம் என்பவரே தன்னைக் காதலித்து ஏமாற்றியதாக குறித்த இளைஞர் தனது பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.
குறித்த பெண் தன்னை மட்டுமல்லாமல் ஏராளமான ஆண்களை காதலித்து ஏமாற்றியதாக தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் இல் எழுதப்பட்டுள்ள தற்கொலைக் குறிப்பில், விக்கி என்பவர் இந்த பிரச்சினையை இப்படியே விட்டு விடும் படியும் அவ்வாறு செய்யாவிட்டால், தனக்குள்ள பொலிஸ் செல்வாக்கை பயன்படுத்தி சிறைக்குள் தள்ளி விடுவேன். என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காதலி இவ்வளவு நாள் பாவித்த அத்தனை தொலைபேசி இலக்கங்களையும் பேஸ்புக் இல் பட்டியலிட்டுள்ளார்.
காதல் தோல்வியில் தூக்கில் தொங்கிய நிரூபனின் உடல் நேற்றைய தினம் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் கண்ணீர்க் கதறல்களுக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.
0 Comments