மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி,நாவற்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்னொவருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் கல்லடி,இசை நடனக்கல்லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே 25வயதுடைய இளம் தாய் ஒருவரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளபோதிலும் கால்கள் நிலத்தில் உள்ளதால் இந்த சடலம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதிவானின் உத்தரவுக்கமைய சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
ஒரு குழந்தையின் தாயான இவர் காரைதீவினை சேர்ந்தவர் எனவும் கணவனை பிரிந்து வாழ்ந்துவருவதாகவும் மறுமணம் செய்யவும் உத்தேசித்திருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
எனினும் இந்த தூக்கு சம்பவம் தொடர்பில் சந்தேகம் உள்ளதால் இது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments