பிரித்தானிய செஸ்டர் மிருகக் காட்சிசாலையிலுள்ள 29வயது மனிதக் குரங்கொன்றுக்கு உலகெங்குமுள்ள மருத்துவர்கள் மிருக வைத்தியர்களை உள்ளடக்கிய குழுவொன்று முன்னோடி அறுவைச் சிகிச்சையொன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

விக்கி என்ற மேற்படி மனிதக் குரங்கிற்கு ஏற்பட்டிருந்த சுவாசப் பிரச்சினையை சீர் செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சையில் பிளக்பூல் மிருகக்காட்சி சாலை மிருக வைத்தியர்கள் சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த மனிதக்குரங்கு நிபுணர்கள், நியூபீல்ட் சுகாதார நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மனிதனது மண்டையோடும், மனிதக் குரங்கினதும் மண்டையோடும் ஒரே அமைப்பைக் கொண்டிருந்ததால் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்வது சாத்தியமானதாக செஸ்டர் மிருகக் காட்சிசாலையைச் சேர்ந்த ஸ்டீவ் அன்வின் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் இத்தகைய அறுவைச் சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
0 comments: