Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செட்டிபாளையத்தினைச் சேர்ந்த இளம் பெண்ணைக் காணவில்லை


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துச்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

செட்டிபாளையம் பிரதான வீதியை சேர்ந்த சிவலிங்கம் வைஸ்ணவி(21வயது)என்ற இளம்பெண் மட்டக்களப்பில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.

குறித்த பெண் குறித்த வங்கிக்குசென்று பணத்தினை மீள எடுத்துக்கொண்டு சென்றுள்ள நிலையிலும் இதுவரையில் குறித்த பெண் இதுவரையில் வீடு வந்துசேரவில்லையென பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது
.
குறித்த பெண் காணாமல்போனமை தொடர்பில் களுவாஞ்சிகுடி மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் குறித்த இளம் பெண் வீடுவந்துசேரவில்லையெனவும் பெண்ணின் பணத்துக்கா யாரும் கடத்திச்சென்றார்களா அல்லர் வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

காணாமல்போன பெண் வேறு சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் அற்றவர் எனவும் குறித்த பெண்ணின் வீட்டில் வீட்டு நடவடிக்கைகளை கவனித்து வருபவர் எனவும் பிரதேச தகவல்கள் தெரிவித்தன.

குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments