Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாணத்தில் 28 நெசவுப் போதனாசிரியர்களுக்கு நியமனம்.

கிழக்கு மாகாணத்தில் 28 நெசவுப் போதனாசிரியர்களுக்கு நியமனம்....
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள 3 மாவட்டங்களையும் சேர்ந்த 28 நெசவுப் போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (12) மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்குமாகாண கிராமியக் கைத்தொழில் பணிப்பாளர் ரி.தென்னக்கோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில.கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நஸீர் அகமட் அவர்கள் கலந்து கொண்டு 20 வருடங்களின்பின் நெசவுப் போதனாசிரியர்களுக்கான இந்நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் மேலும் அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன்இ விவசாய திணைக்கள உதவி ஆணையாளர் என்.நௌபர்இ மாகாண விவசாயப் பணிப்பாளர் எச்.குசைன் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments