Home » » "அப்பா" குறும்பட விமர்சனம்

"அப்பா" குறும்பட விமர்சனம்

தாயில்லாத பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்து உயர் பதவியை அடைய வைக்க பாடுபடும் தகப்பனின் கதையே இந்த  “அப்பா” குறும்படம்
அதிகாலையிலேயே நேரத்துக்கு எழுந்து சிறு வருமானம் தரும் வேலைகளை முடித்து விட்டு மகனுக்கான தேனீர் போட்டு கொடுக்கின்றார் அந்த அப்பா இவ்வாறான ஒரு அப்பா இன்று பெரும்பாலும் யாருக்கு உண்டு ஆனால் அந்ந மகனோ எடுத்தவாறில் “மா கலந்த  தேனீர் போடவில்லையா ”என்று  அந்ந தந்தையின் பாசத்தை உதாசினப்படுத்துகின்றான்.அத்தோடு நின்று விடாமல் பணம் பணம் என்று கேட்கும் போது எல்லாம் அந்த தந்தை குனிகுறுகின்றார். என்றாலும் தன் பிள்ளை ஒரு நாள் பெரிய ஆளாக வந்துவிடுவான் என்கின்ற நம்பிக்கையில் கடன்களை வாங்கி கொடுக்கின்றார்.
 கடன்வாங்கி  பணத்தை மகனிடம் கொடுத்தால் மகனோ கடை ஒன்றிற்குச் சென்று சிகரட் வாங்கி குடித்து விட்டு எஞ்சிய மீதியை கடையின் முன்னுள்ள குப்பை கூடையில் இட்டு  செல்கின்றான். இதை அறியாமல் அந்த தந்தையோ அக் குப்பை கூடையினை சுத்தம் செய்கின்றார்.அம் மகன் சிகரட் புகைப்பதோடு மட்டும் நின்று விடாமல் நண்பர்களுடன் இணைந்து மது பானங்களையும் அருந்துகின்றான்.மீண்டும் மதுபான கடைக்குச் சொல்லும் அம் மகன் செல்லும் போது தந்தையின் நண்பரிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றான்.தந்தையின் நண்பரோ தம்பி “உங்க அப்பா ரொம்ப கஷ்ட பட்டு வேலை செய்து படிக்க வைக்காரு நீங்களோ இப்படி மதுபானக் கடையில் ” என்று அறிவுரைகளைக் கூறினார்.அவ்வாறு அப்பாவின் நண்பர் அறிவுரை கூறியும் வீட்டிற்கு வந்து மீண்டும் பணம் கேட்கின்றான் அந்த மகன்.
 மகன் பணம் கேட்டதும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கடன் வாங்க போடியாரிடம் கடன் கேட்கின்றார்.போடியாரோ “உன்ட மகனையும் உதவிக்கு கூப்பிடன் ”என்று கூற அந்த அப்பாவோ “அவன் பெரிய எஞ்சினியரா வந்திருவான் அதுக்கு பிற எனக்கு என்று சொல்லுகிறார்.போடியாரோ பின்னேரம் கொஞ்சம் வீட்ட வா மலசலகூடம் ஒன்றை சுத்தம் செய்ய வா  என்று கூறி பணத்தை கொடுக்கினறார்.அப்பாவும் பணத்தை  மகனிடம் கொடுக்க (தந்தை எப்படி கஷ்டபடுகின்றார் என்பதை புரிந்து கொள்ளாமல்)பெற்றுச் செல்கின்றான்.நண்பனோடு மீண்டும் மதுபான கடைக்குச் சென்று மதுபானத்தை வாங்கும் போது தந்தையே கண்டு விடுகின்றார் ஆனால் பெருந்தன்மைமிக்க தந்தையோ கண்டும் காணாதது போல் சென்று விடுகின்றார். ஆனாலும் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியின் காரணமாக இனியவாது ஒழுங்காக கல்வி கற்போம் என்று மகன் செயற்படும் போது வேலை செய்து கொண்டிருக்கும் போது பிள்ளையின் போக்கை நினைத்து அப்பாவின் உயிர் பிரிகின்றது.
 இக்குறும் படத்தில் அப்பா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிக்கவில்லை உண்மையாக வாழ்ந்திருக்கின்றார் என்றே கூறவேண்டும் அத்தோடு ஏனைய நடிகர்களும் தங்களது பங்குகளை சிறப்பாக செய்திருந்தனர்.
 ஆனால் உடை அமைப்புக்களில் சற்று கவனம் செலுத்திருக்கலாம் என்று கருதுகின்றேன்.போடியாராக நடித்தவர் இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்கலாம்.
 ஒளிப்பதிவுகள் சிறப்பு ஆனால் ஒலிப்பதிவுகளில் சிறு இடங்களில் தவறு ஏற்பட்டுள்ளது போலும் உதாரணமாக மதுபானக்கடையில் அப்பாவின் நண்பர் அறிவுரை கூறும் போது சில தவறுகள் ஏற்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் சிறப்பாக செயற்பட்டுள்ளார்.இவர் தென்னிந்திய இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ்குமாரின் இசைப்பானியினை பின்பற்றியது போல் தோன்றுகின்றது.
இக்கதையினை எழுதி உயிர் கொடுத்த இயக்குனர் நடிகர் தெரிவுகளை மேற்கொண்டுள்ளார்.அத்தோடு தற்போது எமது பிரதேசங்களில் நடக்கும் உண்மை சம்பங்களைக் கொண்டு கதையினை உருவாக்கியுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |