கல்முனை, மருதமுனையின் பிரதான வீதியிலமைந்துள்ள வர்த்தகக் கட்டிடமொன்றின் மேல் பிரமாண்டமான போயிங் ரக விமான மாதிரியொன்று அண்மையில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளது.
17 அடி நீளமானதும் 23 அகலமானதுமான இந்த விமானத்தினை ஆசிரியரான ஐ.எல்.எம். இஸ்மாயில் தனது ‘வெகா சைட்’ நிறுவனத்தினால் உருவாக்கி கடந்த 6ஆம் திகதி வர்த்தக கட்டிடமொன்றின் மேல் பார்வைக்காக நிறுவியுள்ளார்.
‘ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் போயிங் பயணிகள் விமானத்தின் மாதிரியைப் போன்று இதனை வடிவமைப்பதற்கு சுமார் 200,000 ரூபா செலவானது. இதனை வடிவமைக்க நானும் எனது மகன்களான ஸப்ராஸ் மற்றும் மனாஸிர் ஆகியோர் சுமார் 3 மாதங்களாக பாரிய முயற்சியில் ஈடுபட்டோம்.
முகர்ரப் என்பவர் புதிதாக ஆரம்பித்துள்ள பயண முக வர் நிலையத்தின் விளம்பரத்திற்காகவே இந்த விமானம் வடிவமைக்கப்பட்டது’ என பாடசாலை ஆசிரியரும் விமானத்தை வடிவமைத்தவருமான ஐ.எல்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
மருதமுனையில் தமிழ்–சிங்கள புதுவருட வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் மருதமுனையின் பிரதான வீதியில் அமைந்துள்ள சுமார் 75 கிலோ கிராம் நிறையுடைய அலுமினியம், கல்வனைஸ் இரும்புத் தகட்டினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட விமானம் பொது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
0 Comments