Home » » மட்டக்களப்பு வாழைச்சேனையில் நித்திரை தூங்கியவர் மரணம் - சந்தேகத்தினால் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

மட்டக்களப்பு வாழைச்சேனையில் நித்திரை தூங்கியவர் மரணம் - சந்தேகத்தினால் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் எல்லை வீதி சுங்காங்கேணி என்ற இடத்தில் நேற்று இரவு நித்திரை தூங்கியவர் மரணித்துள்ள நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் கொண்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹ_ஸைன் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புமாறு இன்று (13.04.2014) காலை வாழைச்சேனை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுங்காங்கேணி எல்லை வீதியில் வசித்து வந்த காளிக்குட்டி கனகேந்திரன் (வயது – 38) இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணித்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வாக்கு மூலம் தெரிவித்த மரணித்தவரின் மனைவியான கனகேந்திரம் மதுரம் என்பர் சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்.

நேற்று (12.04.2014) இரவு 08.30 மணியளவில் வெளியில் சென்று விட்டுக்கு வந்த கணவர் மது போதையில் இருந்தார். வீட்டில் உள்ள கபட் கண்ணாடியை காலாள் உதைத்து உடைத்து விட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பிறகு இரவு 10.30 மணியளவில் வந்து வாசலில் தூங்கிவிட்டார.; வழமையாக குடித்து விட்டு வந்து அவ்வாறுதான் உறங்கவது வழக்கம் நான் இரவு சாப்பாட்டுக்காக பல தடவை எழுப்பி பார்த்தும் எழும்பாததால் அப்படியே விட்டு விட்டேன் காலையில் 06.00 மணியைப் போல் எழுப்பினென் எழும்பவில்லை அதனால் அக்காவின் மருமகனை அழைத்து சொன்ன போது அவர் பார்த்து விட்டுச் சொன்னார் மரணித்து விட்டார் என்று அதனால் நான் பொலிஸிக்குச் சென்று விடயத்தைத் தெரியப் படுத்தினேன் என்று தெரிவித்தார்.

சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் விவசாயத்திற்கப் பயன்படுத்தும் கிருமி நாசினி போத்தல் ஒன்று பாவித்து விட்டு மூடப்பட்ட நிலையில் கிணற்றில் காணப்படுவதாலும் இவர் நஞ்சருந்தியதை எவரும் காணவில்லை என்பதாலும் இவரது மரணம் எதனால் ஏற்பட்டது என்ற சந்தேகத்தில் மருத்துவ பரிசோதனைக்காக சடலத்தினை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பதில் நீதவான் விடுத்த உத்தரவின் பேரில் சடலம் காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு வைத்திய பரிசோதனையின் பின்னர் நஞ்சருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்று தீர்ப்பளித்து சடலம் உறவினர்களிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 மருத்துவ பரிசோதனையை கரடியனாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சுகுமார் நடாத்தினார்.












Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |