Advertisement

Responsive Advertisement

இறைச்சிக்கு தடை முற்றாக நீக்கம்.


கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், அம்பாறை,  ஆகிய மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த விலங்கு இறைச்சி தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மாடுகள் மற்றும் ஆடுகளின் வாய் மற்றும் கால்களில் பரவி வருகின்ற கோமாரி நோயினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்க்கும் வகையில்   கடந்த பெப்ரவரி  மாதம் 25 ஆம் திகதி கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த மாவட்டங்களில் மிருகங்களின் வாய் மற்றும் கால்களில் ஏற்பட்ட நோய்த்தாக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குமார டி சில்வா தெரிவிக்கின்றார்.

இதற்கான உத்தரவுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது அதில் அனுராதபுரம் மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கப்பட்டுள்ளதாக் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments