Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சங்கா, மஹேல கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பது இறைவனின் விருப்பம்: தோல்வி குறித்து டெரன் சமி

5ஆவது இருபது-20 உலக கிண்ணத்தை இலங்கை அணியின் சரித்திர நாயகர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வெற்றி கொள்ள வேண்டும் என எல்லாம் வல்ல இறைவன் நினைக்கிறார். எனவே தான் இறைவன் எமக்கெதிரான போட்டியில் அவர்களை வெற்றி கொள்ள செய்து இறுதிப்போட்டிக்கு தெரிவாக்கியுள்ளார் என மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபது-20 தொடரின் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
 
இலங்கை அணி இம்முறை கிண்ணத்தை வெல்வதற்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிந்துள்ளார். ஏனெனில் இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள கிரிக்கெட்டின் இரண்டு சரித்திர நாயகர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வெற்றி கிண்ணத்துடன் ஓய்வு பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அதுவே அவர்களை இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
 
இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாம் ஏமாற்ற மடைந்தாலும் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்ற மீண்டும் புத்துயிர் பெறுவோம். 
 
மேலும் இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் அதேவேளை ஏனைய மூன்று அணிகளுக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
இத்தொடருடன் ஓய்வு பெறப்போகும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோருக்கு இது ஒரு சர்வதேச நிகழ்வாக அமையும் என்றார்.
 
என் வாழ்க்கையில் இவ்வாறான பனிமழையை பார்த்ததே இல்லை. போட்டியின் இடைநடுவில் ரசிகர்கள்  எம்மீது கற்களை  வீசுகின்றனர் என்றே நான் நினைத்தேன் என நகைச்சுவையாகவும் அவர் தெரிவித்தார்.
 
 

Post a Comment

0 Comments