ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்து சிறுமி சபேசினி செந்தூர்ச்செல்வன் ஜெர்மனியில் நடைபெறும் All rights too The voice kids SAT 1 நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக பொப் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார்.
சபேசினியின் குரல் ஒரு வித்தியாசமான பொப் இசைக்கு ஏற்ற அருமையான குரல் மற்றும் தனது குரலுக்கு ஏற்ற பாடல் தெரிவு என்றும் பாராட்டினார்கள்.
மற்றும் மூன்று நடுவர்களில் சபேசினிக்கான பயிற்சியாளரை தெரிவு செய்யும் போது “ஜோகானஸ்”என்ற நடுவரை அவர் தெரிவு செய்கிறார்.
அப்போது ஜொகானஸ் அளவு கடந்த மகிழ்ச்சியை சொல்ல மற்றைய இரு நடுவர்களும் தம்மை பயிற்சியாளராக தெரிவு செய்யவில்லையென தமது கவலையை சொல்கிறார்கள் .
சபேசினியின் திறமையான வெளிப்பாட்டின் பெறுபேறுகள் நடுவர்கள், அவையோர்கள்,மற்றும் உறவுகளின் குதூகலிப்பிலும் வெளித்தெரிகிறது
0 Comments