Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ் யுவதியின் மர்மக் கொலையில் கிறிஸ்தவ குருமார் தொடர்பாம்…?

குறித்த உயிரிழந்த யுவதி பெரிய கோவில் என்றழைக்கப்படும் மரியன்னை தேவாலயத்தினில் ஞாயிற்றுக்கிழமைகளினில் மதபோதனைகளை மேற்கொண்டு வந்தவரென கூறப்படுகின்றது. அவ்வேளையினிலேயே இரண்டு இளம் மதகுருமார் அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருந்த நிலையினிலேயே தற்போது தமது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தவர்கள் வாதிட்டுவருகின்றனர்.
யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளம்யுவதி ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டமை தொடர்பினில் யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்த சில தரப்புக்கள் தயாராகிவருகின்றன. குறித்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயது மதிக்கத்தக்க யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டா எனவும் இவர் குருநகர் பகுதியினை சேர்ந்தவரெனவும் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பிரேத பரிசோதனையினில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையினில் குடும்பத்தவர்கள் சடலத்தை பொறுப்பேற்றுள்ளனர். எனினும் இவரை தற்கொலைக்கு தூண்டியதாக உதவி பங்குதந்தையாக கடமை ஆற்றிய திரச்செல்வம் குயின்ஜ்ரன் பெணான்டோ [சொந்த ஊர் எழுவதீவு] மீது குடும்பத்தவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் வழங்கிய வாக்கு மூலப்பிரகாரம் குறித்த மதகுருமாரை பொலிஸார் கைது செய்யவில்லையெனவும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லையெனவும் குற்றஞ்சாட்டும் குடும்பத்தவர்கள் இதனை கண்டித்து நாளை காலை யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே தருணம் பார்த்திருந்த சில தரப்புக்கள் இவ்விவகாரத்தினில் குளிர்காயவும் மனித உரிமை செயற்பாடுகளினில் ஈடுபட்டுவரும் கத்தோலிக்க மதகுருமார் மீது சேறு பூசவும் முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இத்தகைய தரப்புக்களே நாளை போராட்டத்தினை தூண்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments