Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் முதியவரின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூறையடி பகுதியில் தோணாவில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.30மணியளவில் சூரையடி  அதிசயப்பிள்ளையார் ஆலய வீதியின்  தோணா  நீரோடையில் இருந்தே  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் நுறையடியை சேர்ந்த ஞா.மகாலிங்கம் (70வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஊண்றுகோலுடன் பயணம்செய்துவரும் இவர் மலம் கழுவுவதற்காக நீரோடைக்கு சென்றபோது தவறி வீழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.








Post a Comment

0 Comments