Advertisement

Responsive Advertisement

தன்னை பற்றிய விவரங்களை மறந்த வாலிபர்

ஐந்து மொழிகளை புரிந்து கொள்ளும் வாலிபர் தன்னை பற்றிய விவரங்களை மறந்து அவதிப்படுகிறார். நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த டிசம்பரில் கடுமையான பனிப்பொழிவுக்கு நடுவில் மயங்கிக் கிடந்த 20 வயது மதிக்கத்தக்க நபரை அந்நாட்டு போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து நார்வே போலீசார் கூறியதாவது: மூன்று நாட்கள் ‘கோமா’ நிலையில் இருந்து மீண்ட அந்த வாலிபர் யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை.
அவரிடம் விசாரணை நடத்தியபோது தன்னைப் பற்றிய தகவல்களை அவர் மறந்தது தெரிய வந்தது.
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் இந்த வாலிபர் செக் ஸ்லோவக் போலிஷ் மற்றும் ரஷ்ய மொழிகளையும் புரிந்துகொள்கிறார். 187 செ.மீ. உயரமும் நீலநிற கண்கள் மற்றும் அடர்ந்த செம்பட்டை நிற தலைமுடியையும் கொண்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர். இன்டர்போலின் உதவியுடன் இவரைப் பற்றிய தகவலை அறியும் முயற்சி தோல்வி அடைந்ததால் பொதுமக்களின் உதவியை நாடிய நார்வே போலீசார் இவரது படத்தை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments