மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்ட கால தேவையாக இருந்து வந்த மண்முனை துறைக்கான பாலம் பூர்த்தி செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நோபு ஹிற்ரோ ஹோபோ மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் கப்பல் துறை கருத்திட்ட அமைச்சர்களான றோ ஹித அபேகுணவர்தன, நிர்மல கொத்தலாவல கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் ஏ. மஜித், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அமை ச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண பணிப்பாளர் வை. தர்மரெத்தினம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொள்வர்.
187 கோடி ரூபா செலவில் மண்முனைப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் ஜெய்கா நிறுவனம் 147 கோடியே 30 இல ட்சம் ரூபாவை இதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கை அரசு 39 கோடியே 70 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும் எழுவான் கரையையும் இணை ப்பதற்காக மட்டக்களப்பு வாவியில் பட்டிருப்பு வலையிறவு ஆகிய இரு பாலங்களையும் அடுத்து கட்டப்பட்டுள்ள மண்முனைப் பாலம் 210 மீற்றர் நீளமும் 9,8 மீற்றர் அகலமும் கொண்டதாகும். இரண்டு தாம் போதிகளையும் இப்பாலம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments