Advertisement

Responsive Advertisement

மியாங்குளம் பரிச்சாத்தமாக திறந்துவிடப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இடைக்கா போக நெற் செய்கையினை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு அமைக்கப்பட்ட மியாங்குளம் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களினால் (31.03.2014) பரிச்சாத்தமாக திறந்துவிடப்பட்டது.
> மட்டக்களப்பு அதிக அளவான நில வளத்தினைக் கொண்டுள்ளபோதும் மழையை மாத்திரம் நம்மி விதைப்பதும் பின்னர் அடுத்த பெரும் போகம் வரை மழையை எதிர்பார்hத்து நிற்பதுமே விவசாயிகளை மேலும் வறுமைநிலைக்கு தள்ளிக் கோண்டிருக்கின்றது இதனைத்தடுத்து மட்டக்களப்பின் வறுமைநிலையினைக்குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களினாலும் ஏனையோரினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையின் தொடர் நடவடிக்கையாக சுமார் 600 ஏக்கர் இடைப்போகம் செய்யக் கூடியதாக யுத்தகாலம் தொடக்கம் விவசாயிகளாலும் பல திணைக்களத்தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டு வந்த இவ் மியாங்குளம புரிதாக நிர்மானிக்கப்பட்டு பரிச்சாத்தமாக திறந்துவிடப்பட்டது இன்நிகழ்வில் மட்டக்களப்பு கமநல திணைக்கள உதவிப்பணிப்பாளர் சிவலிங்கம் உள்ளிட் அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்

                    


Post a Comment

0 Comments