Home » » கல்முனை அஷரப் வைத்தியசாலைக்கு அருகில் இரு தனியார் பஸ் வண்டிகள் மோதியதில் 3 பேர் பலி 18 பேர் காயமுற்றனர்

கல்முனை அஷரப் வைத்தியசாலைக்கு அருகில் இரு தனியார் பஸ் வண்டிகள் மோதியதில் 3 பேர் பலி 18 பேர் காயமுற்றனர்

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த அதி சொகுசு பஸ் வண்டியொன்றும் வவுனியா செல்வதற்காக கல்முனை நகரை நோக்கி பயணித்த அசோக்லேலண்ட் பஸ் வண்டியொன்றும் கல்முனைக்குடி முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள வளைவில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் நேருக்குநேர் மோதியதால் பாரிய விபத்தொன்று நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் மூவர் மரணித்துள்ளதுடன் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரணித்தவர்களின் ஜனாசாக்களும் வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

மரணித்தவர்களில் ஆண் ஒருவரும் பெண்கள் இருவரும் அடங்குகின்றனர். மரணித்தவர்கள் கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய சல்மான் பாரிஸ் , சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சலீமா தமீம் ( மின்னா ) , அக்கரைப்பற்று மத்திய வீதியைச் சேரந்த 55 வயதுடைய பீபி பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் தொகை 18 என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..


















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |