மர்மமான விமானம் தொடர்பில் தொடர்ந்தும் ஊகங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் மற்றுமொரு அதிகாரபூர்வமற்ற தகவலினை மலேஷிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
எம்.எச்.370 விமானம் கடந்த சனிக்கிழமை 239 பயணிகளுடன் மர்மமானது. 6ஆவது நாளாக இன்றும் தேடுதல் பணிகள் தொடர்கின்றன.
இந்நிலையில் மர்மமான விமானம் இறுதியாக விமானப்போக்குவரத்து கட்டுபாட்டு நிலையத்துடன் தொடர்புகொண்டதன் பின்னர் அடுத்த சில மணிநேரங்கள் விமானம் பறந்துள்ளதா தகவல் வெளியானது. ஆனால் இத்தகலுக்கு தற்போது அதிகாரபூர்வமாக மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோன்று விமானம் மர்மமான நாள் முதல் பல ஊகங்கள் வெளியாகியுள்ளன. அவை ஊடகங்களிலும் இணையத்திலும் பரவடைந்த பின்னர் மலேஷிய அதிகாரிகள் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியாகி மறுக்கப்பட்ட தகவல்கள்
விமானத்தில் பாகமொன்று தென் சீனக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது, சீனாவில் செய்மதியினால் விமானத்தில் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது, விமானம் கடத்தப்பட்டது என பல தகவல்களை அதிகாரபூர்வமாக மலேஷிய அதிகாரிகள் மறுத்தனர்.
பரவும் வதந்திகள்
இவை தவிர விமானம் குறித்து அடிப்படை ஆதரமற்ற தகவல்களும் இணையத்தில் உலா வருகின்றன. வேற்றுக்கிரகவாசிகளால் விமானம் கடத்தப்பட்டுள்ளது, நடுவானில் வெடித்துச் சிதறியதை மீனவர்கள் கண்டனர் போன்ற போலியான தகவல்களும் பரவலடைந்துள்ளது.
மக்களை குழப்ப வேண்டாம்
இந்நிலையில் கூகுள் நிறுனம் தங்களது கூகுள் மெப்பினைப் பயன்படுத்த வேண்டாமென ஊடகங்களைக் கோரியது. ஏனெனில் கூகுள் மெப்பில் விமானம் பறப்பது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் உண்மையானவை மக்கள் நம்புகின்றனர்.
அவை மக்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்கின்றது. அதாவது கூகுளின் செய்மதிப் படங்களே அவை மக்கள் குழப்பமடைந்துள்ளாக தெரிவித்திருந்தது.
தொடர்ந்தும் விரிவடையும் தேடுதல்
இதேவேளை தேடுதல் படலம் தொடர்ந்தும் விரிவடைந்து செல்கின்றது. உலகின் 11 நாடுகள் இணைந்து 40 கப்பல்கள் மற்றும் 39 ஹெலிகொப்டர் மூலம் தேடப்படுகின்றன.
ஆரம்பத்தில் சந்தேகித்த இடங்களைத் தாண்டி பல மைல்கள் தேடுதல் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சீன செய்மதி ஊடாகவும் தேடுதல் மேற்கொள்ளப்படுகின்றன.
சந்தேகங்கள்
விமானம் மர்மமாவதற்கு வாய்ப்பான பல கோணங்களிலும் சந்தேகத்தில் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தீவிரவாதிகளின் கைவரியா என்ற சந்தேகம் குறைவாகவே உள்ளன. அமெரிக்காவும் இது தீவிரவாதிகள் செயலாக இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஆனாலும் தற்போதைய நிலையில் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன.
மர்மங்கள் பலவற்றுடன் மர்மமாகியுள்ள விமானம் தொடர்பான தகவல்களில் எரிச்சலடைந்துள்ள பயணிகளின் சொந்தங்களுக்கு ஆதரவாக பலரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
முந்தைய தகவல்களுக்கு...
எம்.எச். 370 விமானத்தின் இணை விமானி, இளம் பெண்களுடன் விமானி அறைக்குள் கும்மாளமடித்தார் : 2011இன் சம்பவம் குறித்த யுவதியின் தகவலால் பரபரப்பு
மர்மமான மலேஷிய விமானம் தொடர்பில் விரிவடையும் தேடுதல்களும் மர்மங்களும்
239 பேருடன் மர்மமான விமானத்திற்கு என்ன நடந்திருக்கும்? விமானங்கள் காணாமல் போவது ஏன்?
239 பேருடன் சென்று கொண்டிருந்த மலேஷிய விமானம் காணாமல் போனது
0 Comments