Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அக்கரைப்பற்று நாவற்காடு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்று நாவற்காடு பகுதியில் 36 வயதுடைய 14,09 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சுப்பையா அசோக்குமார் நேற்று (08) அதிகாலை தனது வீட்டின் முன் உள்ள மாமரத்தில் தூக்கில்  தொங்கிய நிலையில்  சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது.குறித்த நபர் கடந்த 06 மாதங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் வேளையில்  (07) குடும்ப பிணக்கை தீர்க்கும்  மீதான வழக்கில் ஆஜராக நீதிமன்றம் சென்றுள்ளார். நீதிமன்றம் அன்றைய தினம் 7000ரூபா பணத்தை  குடும்பத்திற்கு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. பணத்தை செலுத்த முடியாத நிலையில் தற்காலிகமாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட போதும் அவரது உறவினரால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் பிற்பாடே இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments