மலேசிய அரசின் நாடகம் அம்பலம் தமிழா கொஞ்சம் இதை படி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகியுள்ளது குறித்து மலேசிய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், விமானம் கடத்தப்பட்டு சோமாலியா அல்லது மங்கோலியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவில் இடம் பெற்றுள்ள மலேசிய அதிகாரி ஒருவரே இதைத் தெரிவித்துள்ளதால் மலேசியாவின் மீதான சந்தேகம் வலுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே விமான விவகாரத்தில்
மலேசிய அரசு மீது சின்ன சந்தேகம் இருந்துதான் வருகிறது. விமானத்தை சீரியஸாகவே அது தேடுவதாகவே தெ்ரியவில்லை என்ற முனமுனுப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில மலேசிய அரசு பொய் சொல்லி வருவதாக மலேசிய அதிகாரியே கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ddd
விமானப்படை அதிகாரி அந்த மலேசிய விமானப்படை அதிகாரி சீனாவைச் சேர்ந்த இணையதளம் டென்சென்ட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், மாயமாகியுள்ள விமானத்தை தொடர்ந்து மலேசிய ரேடார் கண்காணித்துதான் வந்தது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் 45,000 அடி உயரத்திற்கு மேலே ஏறியதும் பதிவாகியுள்ளது. மேலும் அதன் பின்னர் அது அப்படியே திரும்பி மேற்கு நோக்கி திரும்பியது. பின்னர் 23,000 அடி உயரத்திற்குக் குறைந்து இறங்கியது. இதுவும் ரேடாரில் பதிவாகியுள்ளது.
பினாங்கை நோக்கி பின்னர் விமானம் பினாங்கை நோக்கி பயணி்க்க ஆரம்பித்தது. இதுவும் பதிவானது. அதன் பின்னர் விமாஉனம் 35,000 அடி உயரத்திற்கு மேலே எழும்பியது. பின்னர் இந்தியப் பெருங்கடல் நோக்கி வட மேற்கில் பயணிக்க ஆரம்பித்தது. இதுவும் பதிவாகியுள்ளது.
மலாக்கா ஜலசந்தியில் பின்னர் விமானம் மலாக்கா ஜலசந்தி பகுதியில், புலாவு பெராக் என்ற குட்டித் தீவின் மீது விமானம் பறந்தபோதுதான் கடைசியாக ரேடார் பதிவு ஏற்பட்டது. அதன் பிறகு ரேடார் பதிவு இடம் பெறவில்லை.
தெரிவிக்காமல் மறைத்த மலேசியா ஆனால் இந்த முக்கிய விவரங்களை விமானம் மாயமாகி ஒரு வாரத்திற்கு மேலான நிலையிலும் தெரிவிக்காமல் மறைத்து வருகிறது மலேசியா என்று அந்த அதிாகரி கூறியுள்ளார்.
தேவையில்லாமல் தேட விட்ட மலேசியா மேலும் தனக்காக உதவிக் கரம் நீட்டிய பல நாட்டு தேடுதல் படையினரையும் தேவையில்லாமல் மலாக்கா ஜலசந்தி பகுதியிலும், தென் சீன கடல் பகுதியிலும் தேட விட்டது மலேசியா என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சோம்லியா அல்லது மங்கோலியாவில் இதற்கிடையே இன்னொரு மலேசிய அதிகாரி கூறுகையில், விமானம் மேற்கு நோக்கி பறந்துள்ளது. எனவே அனேகமாக அது மங்கோலியா அல்லது வடக்கில் சோமாலியாவில் இருக்க வாய்ப்புள்ளது என்றார். இந்த நாடுகளில் ரேடார் மூலம் துப்பு துலக்குவது என்பது மிகக் கடினமாகும் என்றார் அவர்.
ஏன் அங்கு.. சோமாலியா அல்லது மங்கோலியாவில் விமானம் இறங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வருவதற்குக் காரணம், அந்த நாடுகளில் ஒரு விமானத்தை தரையிறக்க முன் அனுமதி பெறத் தேவையில்லாயாம்.
நம் பாட்டுக்கு இறங்கிப் போய்க் கொண்டே இருக்கலாமாம். மேலும் சோமாலியாவில் முறையான அரசும் இல்லை. உள்நாட்டுப் போர் களை கட்டியுள்ள பிரதேசம் அது. அங்குள்ள போராளிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் பணம் கொடுத்தால் போதும். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தல்காரர்களின் சொர்க்கம் மங்கோலியா அதேபோல மங்கோலியாவில் ஏராளமான ரகசிய விமான நிலையங்கள் உள்ளதாம். இங்கு சட்டவிரோதமாக பலர் விமானத்தை நிறுத்தி வைத்திருப்பதும், சட்டவிரோத செயல்களுக்கு இவற்றைப் பயன்படுத்துவதும் சகஜமாகும். பணம் கொடுத்தால் போதும், இங்கும் எந்த வகையான விமானத்தையும் இறக்கிக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.
0 Comments