Home » » கிழக்கு மாகாணத்தில் வரிசையாக நிற்கும் ஆசிரியர்கள். கரவான்

கிழக்கு மாகாணத்தில் வரிசையாக நிற்கும் ஆசிரியர்கள். கரவான்

எமது அதிபர்கள் கதிரைக்கும் பதவிக்கும் பயந்தவர்கள்
எமது ஆசரியர்கள் சம்பளத்திற்குப் பயந்தவர்கள்
எமது அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக வாக்குறுதி அளிப்பவர்கள்.
மொத்தத்தில் நாங்கள் முதுகெலும்பில்லாத ஒரு சமூகம்
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் அனுப்பட்ட விண்ணப்பம் தெடர்பாக இன்று எமது ஆசிரியர்கள் பிரதேச செயலகங்களிலும்  M.O.H  Office களிலும் வரிசையாக நிற்கிறார்கள். தாங்கள் கர்பிணியா இல்லையா என்று சலம் சோதிக்கும் நிலை இன்று எமது பெண் ஆசிரியர்களுக்கு நேர்ந்துள்ளது. ஏன் எதற்கு என்று திரும்பிக் கேட்க வக்கில்லாத சம்பளத்துக்குப்  பயமும் ஈமானும் கொண்டவர்கள் எமது ஆசிரியர்கள்.
பாடசாலை நேரத்தை வீணாக்கி ஆசிரியர்கள் இன்று இவ்வாறு அலைவதில்தான் எமது மாகாணக் கல்விப்பணிப்பாளரின் கெட்டித்தனமும், கல்விச் சீர் திருத்தமும் அமுல் நடத்தப்படுகிறதா? 
3 நாட்களுக்குள் இத்தனை ஆவணங்களையும் கேட்டால் பாடசாலை நேரத்தில்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, முதலாம் தவணைப் பரீட்சை நெருங்குகின்ற நிலையில் ஆசிரியர்கள்; இவ்வாறு அலைவதால் பாடசாலைகள் சீரழிந்துள்ளன. ஒரு திட்டத்தை சீர்படுத்த சீரழியும் நடைமுறை அமுல்படுத்தப்படுகிறது. 
ஒரு பணிப்பாளர் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகத்தானே செய்ய வேண்டும்? PD  ஆசிரியர்களை வேதனைப் படுத்துகின்றவராகவும் அலையவைக்கின்றவராகவுமே தனது பணிப்பாளர் பணியைச் செய்கிறார். 
மரியாதையான ஒரு ஆசிரியர் சமூகம் என்றால் இந்த படிவத்தை பூர்த்தி செய்யாது இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் காலையிலேயே வாக்காளர் டாப்புத் தேடி ஓடுகின்றோமே நாம என்ன வக்கில்லாதவர்களா? நமது சம்பளம் நிறுத்தப்பட்டுவிடுமா? இப்படி மானங்கட்ட ஒரு சம்பளத்த எடுத்தா என்ன எடுக்காட்டி என்ன? 
வருடமெல்லாம் தகவல்; கேட்பதும் விண்ணப்பம் நிறப்புவதும்தான் நமது வேலையா? இதற்குமுன் கொடுத்த தகவல் எல்லாம் எங்கே ? தகவல் கேட்டுத் தயாரித்த விண்ணப்பம் ஐ வைத்து ஒரு பாடசாலையே நடத்தலாம் அவ்வளவு காசி இதற்காக இதுவரை வீணாகி இருக்கிறது.
ஒருவர் எதிர்த்தால்தானே பிரச்சினை ஒட்டுமொத்த ஆசிரியர்களும்; எதிர்த்தால் என்ன செய்ய முடியும்  பிள்ளைப் பெறுகின்ற திகதி மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு என்னத்துக்கு? அவர் என்ன வீயோஜியா? இல்லாட்டி புள்ளப் பொறந்தா வந்து பெயர் வைக்கப்போறாரா? இன்னா நடக்குற கூத்து என்ன இதக் கேட்கப் பாக்க ஆள் இல்லையா?
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |