Advertisement

Responsive Advertisement

கி.பல்கலைக்கழகத்தில்156 தமிழ் மக்கள் காணாமல் போனது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும்

1990ஆம் ஆண்டு கிழக்கு பலக்லைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த 156 தமிழ் மக்கள் காணாமல் போனது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டுமென தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்.யு.குணதாசவிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கலாநிதி ஏ.செல்வேந்திரன் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
1990 காலப்பகுதியில் நிலவிய ஒரு அச்சமான சூழ்நிலையில் கிழக்கு பலக்லைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த மாணவர்கள் பொதுமக்கள், அரசாங்க அதிகாரிகள் என 156 தமிழ் மக்கள் காணாமல் போனார்கள். இது பற்றி முழுமையான ஒரு விசாரணை செய்யப்படல் வேண்டும். அத்துடன் மட்டக்களப்பு சத்துருக் கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி, பனிச்சையடி போன்ற  பகுதிகளில் இருந்தும் 183 தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளார்கள். 
இவர்களில் குழந்தைகள் மற்றும் குடும்ப தலைவர்கள், பெண்கள் அடங்குகின்றனர்.
இது பற்றியும் விசாரணை செய்யப்படல் வேண்டும் என ஆணைக்குழுவை கேட்டுள்ளதாக தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments